microorganism_world

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு விதமான நுண்ணுயிர் உலகம்.

மிகச்சில மைக்ரோப்ஸ் மட்டுமே நாம் லேப்பில் வளர்க்க முடியம். பலவற்றை கல்ச்சர் செய்யமுடியாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

 நம் கை ரேகைப்போல் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு விதமான நுண்ணுயிர் உலகம்.

 அப்படி இருக்கும் பொழுது உலகம் முழுக்க ஒரே டயட் என்பது சரிவருமா எனத்தெரியவில்லை.

 அதனால்தான் ஒரே  உணவு எடுக்கும் ஒருவருக்கு நல்ல விளைவும் இன்னொருவருக்கு டயாபடிசும் வருகிறது.

 முனபு இதை ஜெனடிக் என்றார்கள். இப்பொழுது மைக்ரோபயோம் நுண்ணுயிரிகள் என்கிறார்கள் நுண்ணுயிரி உணவு ஆராய்ச்சியாளர்கள்

 இதில் பைல் ஆசிட் மெட்டபாலிசம், பிலுருபின் மெட்டபாலிசம் போன்றவற்றில் microbes முக்கிய பங்கு வகிக்கிறது.

 கொலஸ்ட்ரால்  ( reduction coprostanol ) அதாவது கொழுப்பு காப்ரோஸ்டனோலாக மாற்றப்படுகிறது.

 இதற்கு காரணம் இயூபேக்டரியம் என்கிறது ஒரு ஆராய்ச்சி நூல்

 இதே சமயம் நம் மைக்ரோ பயோடா சரி இல்லாவிடில் இதை மாற்றும் சக்தி இருக்காது.

 அந்தக்காலதில் என்று சொல்கிறார்கள் இல்லையா..அவர்களுக்கு மைக்ரோபயோம் உலகம் படு ஸ்ட்ராங். வெறுங்கால், காற்றோட்ட வீடு, கொல்லையில் விளையும் காய்கறிகள், ஆற்றுக்குளியல் என நுண்ணுயிர்களின் உலகத்தோடு மிக நுண்ணிய தொடர்புடன் வாழ்ந்து வந்தோம் .அதனால் எதை சாப்பிட்டாலும் அதை செரிக்க கூடிய சக்தி பெரும்பாலும் இருந்தது.

 அதேப்போல் சரியான மைக்ரோபயோம் இருப்பின் ஹைட்ரஜன், மீத்தேன், கார்பன் டை ஆக்சைட் உருவாகும்.  குறைவான இடத்தில் மீத்தேன் ,ஹைட்ரஜன் உருவாகாது. கார்பன் டை ஆக்சைட் குறைவாக உருவாகும். நமக்கு காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டை மைக்ரோபயோம் உலகம் உடைத்து வெளியாவதில் உண்டாகும் கேஸ் அது..

 முழுக்க கார்னிவாரஸ் ஆகும் பொழுது மைக்ரொபயோம் உலகம்  சிதைக்கப்படும். ( வெறும் கெஃபிர், ப்ரோபயாடிக் மட்டும் உதவாது)

 அதன் உலகம் மிகப்பெரிது. நல் ஃபைபர்கள், சில அளவில் கார்ப் எல்லாம் தேவை

 அடுத்து SCFA, – short chain fatty acids , செரம் கொலஸ்ட்ராலுக்கு இருக்கும் தொடர்பை அறியலாம்.

 டிஸ்க்ளைமர்:

 புத்தகம் அது சம்ந்தமான ஆராய்ச்சி பேப்பர் இரண்டையும்  ஒப்பிட்டு எழுதும்  உணவு அறிவியல் கட்டுரை.