The gram positive ,anaerobic ,spore forming bacterium. இவ்ளோ பெரிசா எழுதறதுக்கு பதில் சொல்லிடறேன். பைட்யூரேட் என்பதை சொல்லலாம்.
இவை சுக்ரோஸ், குளுக்கோஸ் உடைப்பதால் உருவாகும்.
இவற்றுக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன சம்பந்தம். ப்ரிபயாடிக் கார்ப் உள்ளே செல்லும் பொழுது அவை குடலுக்குள் இருக்கும் பாக்டிரியா உடைத்து பைட்யூரிக் ஆசிட்டை உருவாக்கும். அவை PH value ஐ மாற்றும் சக்தி கொண்டது.
அதுமட்டுமின்றி இந்த ஆசிட் மதிப்பில் மாற்றம் வரும்பொழுது சால்மொனெல்லா மற்ற பேதோஜன்களுக்கு எதிரான சூழல் உருவாகுகிறது.
எதிர்ப்பு சக்தியின் ரகசிய விதியில் ஒன்று.
இதெல்லாம் ஆராய்ச்சியில் இருப்பதான். பொது மக்களுக்கு யாரும் புரியும்படி சொல்வதில்லை.
கட் ஃப்ளோரா என்றவுடன் என்னமோ என்று நகர்ந்துவிடுவார்கள்.
இவை இண்டஸ்ட்ரியிலும் உற்பத்தி உணடு. பல்வேறு பிரச்சனைகளுக்கு ஃபார்மா உலகத்தில் உபயோகத்தில் இருப்பதாக விக்கி சொல்கிறார்.
உணவில் ஷார்ட் செயின் ஃபேட்டி ஆசிடாக அறியப்படுகிறது..முக்கியமாய் நெய்,வெண்ணையில் ஓரளவுக்கு உள்ளது
முக்கியமாக குடலில் உற்பத்தி ஆக வேண்டும் அவை ஐ.பி.எஸ் க்கு டிரிட்மெண்டாகவும் இருக்கிறது.
என்னிடம் சில தீரா IBS உடையவர்கள் அதன் மூலம் மன சோர்வு அடைந்தவர்கள் மைக்ரோ பயோமை எனக்கு தெரிந்த அள்வில் சரி செய்தப்பொழுது நல்ல முன்னேற்றம் வந்தது. – என் அனுபவம்)
க்ரோட் டிசிஸ் கலோன் கேன்சர் சரியாகும் என் ஒரு பேப்பர் சொல்கிறது.
முக்கியமாக இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் க்கு மிக நல்லது.
SCFA வெறும் நெய் சாப்பிட்டால் ஏறி விடாது.
நம் கட் மைக்ரோபயோமில் உற்பத்தி ஆக வேண்டும்.
நல்ல கட் ஃப்ளோரா இருப்பின் SCFA அதிகம் இருக்குமாம்.
அடுத்து கொலஸ்ட்ரால்
செரம் கொலஸ்ட்ரால் கான்சன்றேஷன் குறைவு என்று படித்ததவுடன் உடனே போய் பேப்பர்கள் தேடினேன். இதைப்பற்றி எமிலி என்ற கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி பயாலஜி ஹார்வெர்ட் யூனிவர்சிட்டி ப்ரொஃபசர், கோ டைரக்டர் ( தெரபடிக் துறை) எம் ஐ.டி ஹாஸ்பிடல் என்பவர் கூறி இருக்கிறார்.
இன்னும் சிறிது நாட்களில் கட் மைக்ரோபயோம் மூலம் கொலஸ்ட்ரால் சரி செய்ய முடியும் என சொல்கிறார்.
இதற்கு என்னிடம் சில கேஸ் ஸ்டடிகள் இருக்கிறது. பெருமளவில் டிரைகிளைசரைட்ஸ் பிரிபயாடிக் மூலம் குறைதகிறது. 27 வயதுப்பையன். . ஒரு மாத டெஸ்ட்டில் இந்த ரிப்போர்ட்.தொடர்ந்து மற்றவற்றை சரி செய்ய வேண்டும். டயட்டை சரியாக செய்தால் மட்டுமே சரி செய்ய முடியும்.
1800 களில் ஒரு சயிண்டிஸ்ட் இதைப்பற்றி பேசி இருக்கிறார்.
சைனா, அமெரிக்கா, நெதர்லாந்தில் பெறப்பட்ட மைக்ரோபயோம் டேட்டா வைத்து ஆராய்ந்ததில் IsmA gene இருக்கும் மைக்ரோபயோம் இருப்பின் 55% முதல் 75% வரை குறைவான அளவில் கொழுப்பு இருக்கிறதாம். ( ரத்த கொழுப்பு அல்ல..மைக்ரோபயோம் stool ஆராய்ச்சி)
Biotic cocktail என்றப்பதம் கவனிக்கிறேன்
அதாவது ஒரு மாத்திரையில் எல்லாம் சரியாகி விடாது.
ஒரே நாளிலும், ஒரு மாதத்திலும் சரியாகாது.
முழுக்க மைக்ரோபயோமை மாற்ற வேண்டும். அதுவும் பல்வேறு உணவுகூறுகளின் மூலம்.
வருங்காலத்தில் பெறும் விடைகள் கிடைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
நாளை இன்னும் பேசுவோம்.
டிஸ்க்ளைமர்:
புத்தகம் அது சம்பந்த அறிவியல் ஜர்னல்கள்,.பேப்பர்கள் படித்து எழுதப்படுகிறது.
இணைப்பு
30 நாட்களின் ப்ளட் ரிப்போர்ட் ( டாக்டர் குடும்பத்தில் உண்டு). இது உடனே கையில் இருந்தது.
ஆராய்ச்சி தரவு.
படத்தின் விளக்கம்.
புரியவில்லை எனில் கேள்விகள் பதியவும். விளக்குகிறேன்.