சிவப்பிறைச்சி நல்லதா? இதுப்பற்றி வாசிக்கும் பொழுது கண்ணில் பட்ட ஒரு விஷயம்.
மாதம் நான்கு , ஐந்து முறை பெரிதாக பிரச்சனையில்லை.
தினமும் சாப்பிடும் பொழுது நம் கட் பாக்ட்ரியா உலக அமைப்பை மாற்றுகிறது.
கார்னிவாரஸ் ,வெஜிடேரியன், வேகன் இவர்கள் சிவப்பிறைச்சியை செரிக்கும் முறை வேறு..வேறு. கார்டியாக் பிரச்சனைகள் சிவப்பிறைச்சியின் மூலம் அதிகம் வரக்காரணம் என்ன என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து சொன்ன விஷயம் இதுதான்
அவர்கள் இதை ” பசுவின் பழிவாங்கல்” என்ற பெயரில் அழைக்கிறார்கள் ( Revenge of cow- தமிழில் மாடு .ப க்கு ப என்பதால் 🙂 )
சிவப்பிறைச்சியின் எல்-கார்னிடைன் ஐ கட் மைக்ரோப்ஸ் எடுத்துக்கொண்டு ட்ரைமெத்லமைன் என் ஆக்சைட் என்பதை வெளியிடுகிறது.( TMAO)
இது ஆர்டரிக்களை கடினப்படுத்துகிறது
நம் வயிற்றில் உள்ள கார்னிவாரஸ்- இறைச்சி உண்ணும் பாக்டிரியாவிற்கு தொடர்ந்து சிவப்பிறைச்சி அளிக்கும் பொழுதுதான் பிரச்சனை அதிகமாகிறது.
இதயப்பிரச்சனைக்கு சிவப்பிறைச்சியில் இருக்கும் வெறும் கொழுப்பு மட்டும் காரணமில்லை என்கிறார்கள்
பசுவின் ( பன்றியின். எல்லா மிருகங்களின்) பழிவாங்கலும் என்கிறார்கள்
அசைவம் தவறில்லை. அதிகம் ஆபத்து என ஆராய்ச்சிகள் சொல்கிறது.
(இதை ஹெல்தி பேக்டிரியாக்கள் அறிமுகம் செய்வதன் மூலமே சரி செய்ய முடியும் என ஹார்வேர்ட் ஹெல்த் சொல்கிறது )