டி.டி பேட்டியை பார்த்தேன் .பலருக்கு எப்படி, ஏன் ஆட்டோ இம்யூன் வருகிறது என்றே புரிவதில்லை..அதை அவரும் தெரிவித்து இருந்தார்.
நம் மைக்ரோபயோம் சிக்கல்களில் இருந்துதான் பெரும்பாலும். லீக்கி கட் என்ற சிக்கலும் காரணம் .
ஓரளவு இதை சரி செய்ய முடியும். அதை விட இதற்கான ஸ்ட்ரெஸ் குறைக்க வேண்டும்.
என்னை பொறுத்தவரை மைக்ரோபயோம் சரி செய்வதன் மூலமும், ஸ்ட்ரெஸ் தெரபிகள் , இடைவிடா கண்காணிப்பு மூலமும் இந்த சிக்கல்களை பெருமளவு குறைக்க முடியும்.
ஆட்டோ இம்யூனுக்கு இயற்கை தாண்டிய ஓவர் சுத்தம், அதற்கு உபயோகிக்கும் கெமிக்கல்கள், இன்றைய உணவுகள் என்று இருந்தாலும் இதில் ஸ்ட்ரெஸ் விளையாடும் பொழுதுதான் கட் முழுக்க சிக்கலுக்கு உள்ளாகிறது
சப்ளிமெண்ட்கள், உணவு மாற்றம் மற்றும் தெரபி மட்டுமல்லாது ஆட்டோ இம்யூனுடன் வாழ கற்றுக்கொள்வதும் முக்கியம் .
இவ்ளோதான் பணம், இதற்குள் வாழ வேண்டும் என்பதற்குள் ஒரு அட்ஜஸ்ட்மெண்ட் வரும். அது போல இந்த ஹெல்த் இப்படி இருக்கும் இதில் இப்படி இருக்கலாம் என மாற வேண்டும்.
உடல், மன உறுதிக்கு சில மாதங்கள் முயற்சி செய்து லைஃப் ஸ்டைல் மாற்ற வேண்டும்.
பரோட்டோவும், பிரியாணியும் சாப்பிட்டுக்கொண்டே ஆட்டோ இம்யூனுக்கு மாத்திரை வேண்டும், சரியாக வேண்டும் என்பது சிக்கல்களை இன்னும் அதிகப்படுத்ததான் செய்யும்.
உண்மையில் ஆட்டோ இம்யூன் வந்தவுடன் வேதனை மறக்க தேவையில்லா உணவு பழக்கம் சேர்ந்து இன்னும் சிக்கலை அதிகமாக்கும்.
இன்னும் கட் மைக்ரோபயோம், ஆட்டோ இம்யூன் பற்றி எழுதுகிறேன்.
அதில் நான் பார்த்த கேஸ் ஸ்டடிகளும் அடங்கும்.
இன்னும் பல பேப்பர்கள் ஆட்டோ இம்யூனுக்கு வெளியிட வேண்டும்
எதை செய்வது? எதை விடுவது?
செய்வோம். நம் நேரம் முடியும் வரை.
Health Readings
இவ்ளோ எழுதறோம் .இவ்ளோ ஆராய்ச்சிகள் உங்களுக்கு தெரியுதே. இன்னுமா சப்ளிமெண்ட்ஸ் கம்பெனிகள் மற்றும் பார்மா கம்பெனிகள் விட்டு வச்சு இருக்காங்க என கேக்கலாம்?
அதையும் ஆராய்ச்சிகள் செய்துக்கிட்டு இருக்காங்க.
கூடிய சிக்கிரம் சின்பயாடிக் மாத்திரைகள் மார்க்கெடடில் உலா வரும்
நான் பொதுவாக் இயற்கை முறைகளையே விரும்புவேன். சப்ளிமெண்ட்ஸ் மிக குறைவுதான்.
ஃபைபர் ஃபூயல்ட் என்ற புத்தகம் வாசித்துக்கொண்டு இருக்கேன். அவர் ஒரு மருத்துவர். காதலி காய்கறிகள் அதிகம் சாப்பிடுவது பார்த்து ஆசிய காய்கறி உணவு வகைகளை சமைத்து சாப்பிட ஆரம்பித்தார்.
பேலியோ, கீட்டோ உணவு வகைகளுக்கு சவாலாக காய்கறிகளை முன் வைக்கிறார். கட் ஹெல்த் உணவுகளே உலகை காப்பாற்றும் என அடித்து பேசுகிறார்.
Telomeres
Telomeres என்ற வாசிப்பில் நாம் இளமையாக நீண்ட நாள் இருப்பது பற்றி இருக்கும் அதிலும் ஆராய்ச்சிகள் நார்சத்து உணவுகளை பரிந்துரைக்கின்றன.
இவர் ஒரு புத்தகத்தில் 600 ஆராய்ச்சிகளின் லிங் அளித்துள்ளார். அதில் ஒன்று ஒன்றாக நானும் மேய்ந்துக்கொண்டுதான் இருக்கிறேன்
Auto Immune
Auto immune பலவற்றை சரி செய்வதாக சொல்கிறார். இங்கு நான் சிலர் தீராத ஆட்டோ இம்யூனில் இருந்து வெளி